அழகர்கோவில், ஜூலை 20: அழகர்கோவிலில் அமைந்துள்ள சுந்தராஜ பெருமாள் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை இருப்பது வழக்கம். வார விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்த கோயிலின் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதன்படி அங்குள்ள அனைத்து உண்டியல்களும் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
உண்டியல் திறப்பின் போது கோயில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் சுரேஷ், மேலூர் சரக ஆய்வாளர் அய்யம்பெருமாள், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கோயில் கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பணிகளின் முடிவில், உண்டியல்களில் பொதுமக்கள் செலுத்திய 50 லட்சத்து 37 ஆயிரத்து 63 ரூபாய் ரொக்கம், தங்கம் 35 கிராம், வெள்ளி 212 கிராம் மற்றும் வெளிநாட்டு டாலர்கள் இருந்தன.
The post அழகர்கோவில் உண்டியல் காணிக்கை ரூ.50 லட்சம் appeared first on Dinakaran.