×

வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

ராமநாதபுரம், ஜூலை 20: பரமக்குடி அருகே பொன்னக்கரை கிராமத்தை சேர்ந்த பெரிகருப்பன் மகன் சஞ்சீவி காந்தி(35). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் பிளஸ் 2 படித்த ஒரு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பழகி வந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமாகி, ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அந்த மாணவி பரமக்குடி மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.

சஞ்சீவ் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கோபிநாத் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் சஞ்சீவி காந்திக்கு 20 வருட சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.

The post வாலிபருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Sanjeevi Gandhi ,Perikaruppan ,Ponnakarai ,Paramakkudy ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 1...