×

ஜிஹெச்சில் மின் இணைப்பு வழங்கல்

 

கீழக்கரை, ஜூலை 20: கீழக்கரை அரசு மருத்துவமனையில் புதிய எக்ஸ்ரே இயந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600க்கும் மேற்பட்ட உள்,வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் தினமும் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வந்தது.

இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இது கலெக்டர் விஷ்ணு சந்திரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது எக்ஸ்ரே மெஷினுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருவதால் நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக செய்தி வெளியிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post ஜிஹெச்சில் மின் இணைப்பு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : GH ,Lower Down ,Lower Down Government Hospital ,Thaluka ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் ஜிஹெச்சில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்