×

பரமக்குடி அருகே சுற்றுலா வந்தவர்களிடம் 5 பவுன் நகை பறிப்பு

பரமக்குடி, ஜூலை 20: பரமக்குடி அருகே சத்திரக்குடியில் கேரளா இளைஞரிடம் ஐந்து பவுன் செயினை வழிப்பறி செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் புதிரவேலிகர பகுதியைச் சேர்ந்தவர் ஹான்சன் டாம் ஜோய். ஐடி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர் ஜெயபால் பைசல் என்பவருடன் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்து தனுஷ்கோடி பகுதியை சுற்றி பார்த்து விட்டு இரவு திருவனந்தபுரம் திரும்பி உள்ளனர்.பரமக்குடி அருகே சத்திரக்குடியில் உள்ள டோல்கேட் பகுதியில் இரவு 11 மணிக்கு காரை நிறுத்து விட்டு ஓய்வு எடுத்துள்ளனர்.

காரை விட்டு வெளியே வந்த ஹான்சன் தனது லேப்டாப்பை வைத்து வேலை செய்ததாக தெரிகிறது.அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞர்கள் ஹான்சனின் லேப்டாப்பை பறித்துள்ளனர். காரில் இருந்த அவரது நண்பர் ஜெயபால் பைசல் வெளியே வந்து பார்த்ததும் லேப்டாப்பை கொடுத்து விட்டு ஹான்சன் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் செயினை பறித்து சென்றனர்.புகாரின் பேரில் சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டோல்கேட் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பரமக்குடி அருகே சுற்றுலா வந்தவர்களிடம் 5 பவுன் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Paramakkudy ,Chatrakkudy ,
× RELATED சத்திரக்குடி வட்டாரத்தில் வேளாண்மை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு