×

ரயில் டிக்கெட் கேன்சல் செய்தவரிடம் ரூ.1.05 லட்சம் மோசடி

சிவகங்கை, ஜூலை 20: தேவகோட்டை, காணிச்சாஊரணி பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(50). இவர் கடந்த 11ம் தேதி புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வருவதற்கு ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்துள்ளார். அதற்கு கட்டணமாக ரூ.2022 செலுத்தியுள்ளார். பின்னர் டிக்கெட்டை கேன்சல் செய்ய முடிவு செய்துள்ளார். அப்போது டிக்கெட் கேன்சல் செய்தால் ரூ.1980 திரும்ப கிடைக்கும் என்று சேகரின் செல்போனிற்கு மெசேஜ் வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து சேகர் ஒரு செல் எண்ணிற்கு பேசியுள்ளார். எதிர் முனையில் பேசிய ஒருவர் டிக்கெட் கேன்சல் செய்த பணத்தை பெறுவதற்கு சேகரின் செல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அதை தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இதை நம்பிய சேகர் ஓடிபி எண்ணை கூறியுள்ளார். இதை தொடர்ந்து சேகர் வங்கி கணக்கில் இருந்து நான்கு தவணைகளில் ரூ.1லட்சத்து 5ஆயிரத்து 877எடுக்கப்பட்டது. இதுகுறித்து சேகர் சிவகங்கை மாவட்ட எஸ்பி செல்வராஜிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் சிவகங்கை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயில் டிக்கெட் கேன்சல் செய்தவரிடம் ரூ.1.05 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Shekhar ,Kanichachurani ,Devakota ,Bhubaneswar ,Chennai ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்