×

தேனி மாவட்ட விவசாயிகளுக்கு வெளி மாநில கண்டுணர்வு சுற்றுலா

 

கம்பம், ஜூலை 20: தேனி மாவட்ட விவசாயிகள் வெளி மாநில கண்டுணர்வு சுற்றுலா திட்டத்தின்கீழ் ஹைதராபாத்தில் உள்ள இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் மில்லட் ரிசர்ச்க்கு பயிற்சியாக சென்று வந்தனர். மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு அட்மா திட்டம் 2023-24ம் ஆண்டின் வெளி மாநில கண்டுணர்வு சுற்றுலா இனத்தின் கீழ் வேளாண்மை இணை இயக்குநர் சங்கர், துணை இயக்குநர் சாந்தி, வேளாண்மை உதவி இயக்குநர் பூங்கோதை, வேளாண்மை அலுவலர் விஷ்ணு மற்றும் ஹேமா அறிவுரைபடி,

கம்பம் வட்டாரத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேனி மாவட்ட விவசாயிகள் 20 பேர் ஒருங்கிணைத்து ஹைதராபாத்தில் உள்ள இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் மில்லட் ரிசர்ச்க்கு 5 நாள் பயிற்சியாக சென்று வந்தனர். விவசாயிகள் அங்கு தங்கள் சந்தேகங்களை ஆதிகாரிகள் முன்னிலையில் தெளிவுபடுத்திக் கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கம்பம் வட்டார தொழில் நுட்ப மேலாளர் கௌரி நிவாஸ் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் குமார் மற்றும் இளம்பரிதி ஏற்பாடு செய்திருந்தனர்.

The post தேனி மாவட்ட விவசாயிகளுக்கு வெளி மாநில கண்டுணர்வு சுற்றுலா appeared first on Dinakaran.

Tags : Theni district ,Kampam ,Theni ,Hyderabad ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்