×

859 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வேப்பூர், ஜூலை 20: திட்டக்குடி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கழுதூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சார் ஆட்சியர் லூர்துசாமி வரவேற்றார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகாமில் வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், வட்ட வழங்கல் பிரிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சுகாதாரத்துறை, ஆதிதிராவிட நலத்துறை மூலம் 859 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 74 லட்சத்து 85 ஆயிரத்து 494 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

இதில் திட்டக்குடி எஸ்பி காவியா, ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், அடரி சின்னசாமி, செங்குட்டுவன், நகர செயலாளர் பரமகுரு, ஒன்றிய குழு தலைவர் சுகுணா சங்கர், துணை தலைவர் கலைச்செல்வி செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் ராஜரத்தினம், செல்வி அமிர்தலிங்கம், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சி.வெ.க.வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் பானுமதி ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் ஆகாஷ்துரை சாய் அப்போலோ கல்வி நிறுவன தலைவர் டாக்டர் தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திட்டக்குடி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

The post 859 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Vepur ,Mudtur ,Thadakkudi Revenue Circle ,Dinakaran ,
× RELATED சித்தளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்