×

நெல்லை கமிஷனர், எஸ்பி அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 73 மனுக்கள் பெறப்பட்டன

நெல்லை, ஜூலை 20: நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 73 மனுக்கள் பெற்றப்பட்டன. இதில் நிலத்தகராறு, பண மோசடி உள்ளிட்ட புகார்கள் அதிகளவில் இருந்தன. தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து மாநகர, மாவட்டங்களில் காவல்துறை அலுவலகங்களில் போலீஸ் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களை புதன்கிழமை தோறும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடத்த வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணவும் கூறப்பட்டிருந்தது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று 31வது பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து 28 மனுக்களை கமிஷனர் ராஜேந்திரன் பெற்றார். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் துணை கமிஷனர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதில் சில மனுக்கள் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடி கொள்ளவும் என போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் மேற்கு மண்டலம் சரவணகுமார், தலைமையிடம் அனிதா மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இதுபோன்று நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 45 மனுக்களை எஸ்பி சிலம்பரசன் பெற்றார். பின்னர் மனுக்களை அந்தந்த பகுதி டிஎஸ்பிக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதிலும் சில மனுக்கள் நீதிமன்றத்தை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நெல்லை மாநகரம், மாவட்டங்களில் வந்த பெரும்பாலான மனுக்களில் நிலதகராறு, பண மோசடி புகார்கள் அதிகம் இருந்தன.

The post நெல்லை கமிஷனர், எஸ்பி அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 73 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Paddy Commissioner ,SP ,Public Depression Day ,Paddy ,Nedervous City Police Commission ,Commissary Day ,Dinakaran ,
× RELATED போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற...