×

தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டலத்தில் ₹10.72 கோடியில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டல பகுதிகளில் ₹10.72 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணியை எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டங்களில் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது மண்டலத்தில் 45 முதல் 48 வார்டுகள், 62 முதல் 70 வார்டுகள் வரை என மொத்தம் 13 வார்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ₹7.92 கோடி மதிப்பீட்டில் சுமார் 18.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு 108 சாலைகள், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டன் கீழ் ₹2.80 கோடி மதிப்பீட்டில் சுமார் 7.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு 44 சாலைகள் என மொத்தம் ₹10.72 கோடி மதிப்பீட்டில் சுமார் 25.71 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 152 சாலைகள் அமைக்கப்படும்.

இதில் 113 சாலைகள் தார் சாலைகளாகவும், 39 சாலைகள் சிமென்ட் சாலைகளாகவும் அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்கான தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு, தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டல பகுதிகளில் ₹10.72 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது, புதியதாக அமைக்கப்படும் சாலைகளில் 39 சிமென்ட் சாலைகளுக்கு மட்டுமான ₹2.27 கோடி எனவும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க், சாலையை மில்லிங் செய்து சாலைகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்கள் எஸ்.இந்திரன், டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா கார்த்திக், ரமணி ஆதிமூலம், ஜோதிகுமார், சிட்லபாக்கம் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டலத்தில் ₹10.72 கோடியில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Corporation 5th Zone ,MLA ,S.R.Raja ,Tambaram Corporation ,5th Zone ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...