×

காக்களூர் ஊராட்சியில் ரூ.4 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை: கலெக்டர் அனுமதி

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்களூர் ஊராட்சி. இந்த ஊராட்சி திருவள்ளூர் நகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில், மாவீரன் துரைசாமி சாலையில் இருந்து, ஆவடி செல்லும் சாலை அருகில், ஒரு ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைந்துள்ளது. இங்கு, பொதுமக்கள் இறந்தவர்களின் பிரேதத்தை எரித்தும், புதைத்தும் வருகின்றனர். தற்போது, இங்கு அதிநவீன எரிவாயு தகன மேடை அமைக்க, திருவள்ளூர் ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் முன்வந்து, அனுமதி கோரி, மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியது.

இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், காக்களூர் ஊராட்சியில், ரூ.4 கோடி மதிப்பில், நவீன எரிவாயு தகன மேடையினை, அமைப்பதற்கான அனுமதி கடிதத்தினை, திருவள்ளூர் ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் தலைவர் சக்திகுமார், செயலாளர் அருணாராணி, பொருளாளர் துக்காராம், முன்னாள் தலைவர் சக்திகுமார், திட்ட சேர்மன் விஜயநாராயணன் ஆகியோரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, கிளப் உறுப்பினர்கள் டாக்டர் அபர்ணா, ஸ்ரீதர், சுரேஷ்குமார், மதிவாணன், சரிதா, லட்சுமி, ஸ்ரீதேவி, சுப்ரமணி, சிவராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post காக்களூர் ஊராட்சியில் ரூ.4 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை: கலெக்டர் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kakkalur ,Tiruvallur ,Kakalur Panchayat ,Tiruvallur Union ,Tiruvallur Municipality ,Kakaloor Panchayat ,
× RELATED காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டையில்...