×

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 180 கிலோ கஞ்சா பறிமுதல்: ஓட்டுனர் பிடிபட்டார்

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரியில் 180 கிலோ கஞ்சா கடத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை போலீசார் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிரமாக வாகன தணிக்கையில் நேற்றுமுன்தினம் இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது, சத்தியவேடு சாலை மற்றும் ஆந்திராவிலிருந்து வரும் லாரி, கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை சப் -இன்ஸ்பெக்டர் தக்‌ஷிணாமூர்த்தி தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

இதில், ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், சுமார் 8 பாக்ஸ்களில் 180 கிலோ கஞ்சா இருந்து தெரிய வந்தது. உடனடியாக கவரப்பேட்டை போலீசார் வாகனம் மற்றும் ஓட்டுநரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபதி(42) என்பது தெரியவந்தது. விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை வழியாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பூந்தமல்லி: மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து, போலீசார் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், அவரின் பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்ததால், வாலிபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (26). இவர், கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்து மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா, ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார், கைது செய்யப்பட்ட செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 180 கிலோ கஞ்சா பறிமுதல்: ஓட்டுனர் பிடிபட்டார் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Kummidipoondi ,Kavarappettai Chennai-Kolkata ,Andhra Pradesh ,
× RELATED ஊத்துக்கோட்டையிலிருந்து...