×

திருவெள்ளைவாயல் ஊராட்சியில் ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: துரை சந்திரசேகர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

பொன்னேரி: திருவெள்ளைவாயல் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையதை துரை சந்திரசேகர் எம்எல்ஏ திறந்து வைத்தார். பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் திருவெள்ளைவாயல் ஊராட்சி உள்ளது. இங்கு, அதானி துறைமுகம் நிதியில் ரூ.14,70,000 மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாட்டை ஊராட்சி மன்ற தலைவர் போலீஸ் முத்து ஏற்பாடுகள் செய்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ கலந்து கொண்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி அதானி துறைமுக நிர்வாக இயக்குனர் சுதீப் தாஸ் குப்தா, திட்ட மேலாளர் ஜேசுராஜ், ஒன்றிய கவுன்சிலர் மாதவி தன்சிங், காட்டூர் ஆய்வாளர் பன்னீர்செல்வம், வேலூர் பாண்டுரங்கன், ஒன்றிய கவுன்சிலர் நந்தியம்பாக்கம் கதிரவன், காட்டூர் ஹம்நாத், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post திருவெள்ளைவாயல் ஊராட்சியில் ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: துரை சந்திரசேகர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Durai Chandrasekhar ,MLA ,Tiruvellaiwayal ,Ponneri ,Tiruvellaiwayal panchayat ,Ponneri Constituency Meenjoor Union ,Thiruvellaiwayal ,panchayat ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் ஒன்றியத்தில் மழையால்...