×

செல்போன் கடையை உடைத்து கொள்ளை: 3 வாலிபர்கள் கைது

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. கடந்த 15ம் தேதி வழக்கம்போல் விற்பனை செய்துவிட்டு ஊழியர்கள் கடையை மூடிச்சென்றனர். மறுநாள் காலை வழக்கம்போல கடையை திறக்கவந்தபோது கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கே கதவை உடைக்க பயன்படுத்திய இரும்பு ராடுகள் கிடந்தது.

கடை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்கு பதிவுசெய்து வந்தார். இதுதொடர்பாக சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வினோத் என்கிற நைனா (22) ,கொடுங்கையூரை சேர்ந்த கணேசன் (20), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மோகன்ராஜ் (20) ஆகிய 3 பேர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 40 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

The post செல்போன் கடையை உடைத்து கொள்ளை: 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Madurandakam ,Chengalputtu District ,Madurandakam GST Road ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே அதிமுக முன்னாள்...