×

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு சலவை தொழிலாளர்கள் முற்றுகை

செங்கல்பட்டு: சலவை தொழிலாளர்கள் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். செங்கல்பட்டு நகரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான சலவை தொழிலாளர்கள் சொந்த வீடு இல்லாமல், நாடோடி போல் வாழக்கை நடத்துவதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவுடன் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். அவர்களுக்கு தனியே சமுதாய நலக்கூடம் கட்டி தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மகாத்மா காந்தி சலவை தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சலவை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவுடன் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மகாத்மா காந்தி சலவை தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ராட்டினங்கிணறு பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்றுமுன்தினம் பேரணியாக வந்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவுடன் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் கோரிக்கை மனு வழங்கிவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு சலவை தொழிலாளர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,brinkalpattu ,
× RELATED பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு...