×

கல்லூரி பேராசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு

சென்னை: கல்லூரி பேராசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒன்றிய-மாநில அரசு சார்பில் பள்ளிகள், கல்லூரிகளில் கற்பித்தல் பணிகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கல்லூரி பேராசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, 2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஐ.டி.ஐ. பயிற்றுனர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் www.awards.gov.in, https://nat.aicte-india.org என்ற இணையதளங்களில் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் அவர்களின் சிறந்த முன்னெடுப்புகள், ஆராய்ச்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட விவரங்களை தொகுத்து 800 வார்த்தைகளுக்குள் பதிவிட வேண்டும். இதில் தேர்வாகும் சிறந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு டெல்லியில் ஜனாதிபதி செப்டம்பர் 5ம் தேதி விருது வழங்குவார்கள். இதுதொடர்பான மேலும் விவரங்களை www.awards.gov.in, https://nat.aicte-india.org என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

The post கல்லூரி பேராசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,University Grant ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...