×

அறநிலையத்துறை தகவல் தென்காசி குமாரசுவாமி கோயிலின் ரூ.7.50 கோடி மதிப்பு நிலம் மீட்பு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டம், பண்பொழி, திருமலை குமாரசுவாமி கோயிலுக்கு சொந்தமாக புளியரை கிராமத்தில் 143.24 ஏக்கர் நன்செய் நிலம் புளியரை கூட்டுறவு பண்ணை சங்கத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலத்திற்கு புளியரை கூட்டுறவு சங்கத்தினர் சுமார் ரூ.3 கோடி குத்தகை பாக்கி வைத்திருந்ததால், 2018ம் ஆண்டு வருவாய் நீதிமன்றத்தில் உரிய கால அவகாசம் வழங்கி நிறைவேற்றப்பட்ட உத்தரவுப்படி நிலுவைத் தொகையினை செலுத்தாததால், வருவாய் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நன்செய் நிலம் மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.7.50 கோடியாகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் உதவி ஆணையர் கோமதி மற்றும் கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post அறநிலையத்துறை தகவல் தென்காசி குமாரசுவாமி கோயிலின் ரூ.7.50 கோடி மதிப்பு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Charities Department ,Tenkasi Kumaraswamy Temple ,Chennai ,Department of Hindu Religious Charities ,Thenkasi District, Panbozhi ,Puliarai ,Thirumalai Kumaraswamy Temple ,
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...