×

பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா உள்ளார். விந்தியா குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அரசியல் பேச்சாளர் குடியாத்தம் குமரன் சில வாரங்களுக்கு முன்பு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் இன்பதுரை தேசிய மகளிர் ஆணையத்தில் வீடியோ பதிவுடன் புகார் அளித்தார். அதை மாநகர சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்தபோது, நடிகை விந்தியாவை குடியாத்தம் குமரன் அவதூறாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,எழும்பூர் பெருநகர கூடுதல் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தாக்கல் செய்தனர்.

The post பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Kudiatham Kumaran ,Chennai ,Vindhya ,AIADMK Policy Propagation ,YouTube ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...