×

வைகோ எச்சரிக்கை பொது சிவில் சட்டம் ரத்தக்களறிக்கு வழிவகுக்கும்

சென்னை: தேசிய அளவிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: இந்தியா முழுவதும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாகும். இது அரசியல் சட்டத்திற்கு முரணானது ஆகும். கடந்த ஆண்டு பாஜ எம்பி, பொது சிவில் சட்டத்திற்கான தனிநபர் மசோதா கொண்டு வந்தார். நாங்கள் கடுமையாக எதிர்த்ததனால், மசோதாவை நிறைவேற்ற முடியாது என்று அஞ்சி பின்வாங்கிப் போனார்கள். இந்த ஆண்டும் அதே மாநிலங்களவை உறுப்பினர் மீண்டும் பொது சிவில் சட்டத்திற்கான மசோதாவை அறிமுகம் செய்ய முயன்றார். நாங்கள் கடுமையாக எதிர்த்ததனால் பின்வாங்கிக் கொண்டார். ஆனால் வரும் நாட்களில் பொது சிவில் சட்ட மசோதாவை எப்படியும் நிறைவேற்ற பாஜவினர் துடிப்பார்கள். அப்படி நிறைவேற்றப்பட்டால், வகுப்பு மோதல்களுக்கும், ரத்தக் களறிகளுக்கும் வழிவகுக்கும். அதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post வைகோ எச்சரிக்கை பொது சிவில் சட்டம் ரத்தக்களறிக்கு வழிவகுக்கும் appeared first on Dinakaran.

Tags : Vigo warning ,Chennai ,National All Party Leaders Meeting ,Army Minister ,Rajnath Singh ,Madimagha ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...