×

அதிகளவில் தொழில் முனைவோர்களை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அதிக அளவிலான தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள சிட்கோ தலைமையிடத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தாய்கோ வங்கி, சேகோசர்வ், இண்ட்கோசர்வ் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தனித்தனியே ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் 152 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.3 கோடியே 32 லட்சம் மானியம் கடந்தாண்டு வழங்கப்பட்டது. மானியம் வழங்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை, வர்த்தக ரீதியாக தயாரித்து, சந்தைப்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்பாளர்களை புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு புத்தொழில் நிறுவனம் மற்றும் சுய தொழில் திட்டங்கள் வாயிலாக தேவையான நிதியுதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில், அதிக அளவிலான தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும்.

The post அதிகளவில் தொழில் முனைவோர்களை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Thamo Anparasan ,Chennai ,Guindy ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...