×

செல்போன் அழைப்பை ஏற்காததால் ஆத்திரம் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது

கோவை: கோவையில் செல்போன் அழைப்பை ஏற்காததால் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சக்திராஜா (40). இவர் கோவையில் தங்கி காந்திபுரம் காளீஸ்வராநகரில் உள்ள ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (27) என்பவரும் வேலை பார்க்கிறார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், முன்விரோதம் காரணமாக ஆத்திரத்தில் இருந்த சுரேஷ் நேற்று சக்திராஜாவை செல்போனில் அழைத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் சக்திராஜா செல்போன் இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து நிறுவனத்திற்கு வந்த சுரேஷ் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த சக்திராஜாவிடம், ஏன் பேசிக்கொண்டிருக்கும் போது இணைப்பை துண்டிக்கிறாய், மீண்டும் அழைத்தால் செல்போனை எடுக்கமாட்டாயா? என கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது கோபமடைந்த சுரேஷ் அங்கிருந்த இரும்பு கம்பியால் சக்திராஜாவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக காட்டூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சுரேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செல்போன் அழைப்பை ஏற்காததால் ஆத்திரம் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kovai ,Honey District ,Dinakaran ,
× RELATED கிரகங்களும் பெயர்களும்…