
பரமக்குடி: பரமக்குடி அருகே, கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி கிராம கோயிலில் முளைக்கொட்டு திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடம் பரமக்குடி வட்டாட்சியர் ரவி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருதரப்பினரும் இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும் என வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
ஆனால் வட்டாட்சியரின் உத்தரவை மீறும் வகையில், ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் நேற்று கிராமத்தில் கொட்டகை அமைத்து திருவிழா நடத்த முயற்சித்துள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் ரவி மற்றும் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ஒரு தரப்பினர் அமைத்திருந்த கொட்டகை அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post கோயில் திருவிழாவில் தகராறு பரமக்குடி அருகே கிராம மக்கள் மறியல் appeared first on Dinakaran.