×

பெரிய கட்சிகள் பிரிந்ததால் 50 சீட் குறைகிறது 38 கட்சிகளுடன் பாஜக கூட்டணி? பரபரப்பு தகவல்கள்

சென்னை: பெரிய கட்சிகள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதாலும், சில மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவியதாலும் 50 சீட்டுகள் மக்களவையில் பாஜகவுக்கு குறைந்துள்ளது. இதனால், தேர்தலில் சிறிய கட்சிகளையும் இணைத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள பாஜக அக்கட்சிகளின் கோரிக்கையையும் நிறைவேற்றத் தொடங்கிவிட்டது. பாஜக கூட்டணியில் இருந்து பீகார் மாநில கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. மேலும் காங்கிரஸ், லல்லு பிரசாத்தின் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்தது. இந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைக்கத் தொடங்கி விட்டார் நிதிஷ்குமார். பீகாரில் பாஜக கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது.

அதில் ஐக்கிய ஜனதா தளம் 17 தொகுதிகளில் வென்றிருந்தது. இப்போது அக்கட்சி வெளியேறி விட்டது. மகராஷ்டிராவில் கடந்த முறை சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அதில் 48 தொகுதிகளில் பாஜக மட்டும் 23 தொகுதிகளை கைப்பற்றியது. தற்போது பாஜக தனித்து விடப்பட்டதால் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனாலும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு முன்னரே ஒன்று சேர்ந்து விட்டன. அங்கு மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன. 3 கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் அங்கு பாஜக சீட் பெறுவது கடினம். அங்கு மட்டும் கடந்த தேர்தலில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

மேலும் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தற்போது நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அங்கு இந்த முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்று தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பாஜக 28 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் அங்கு தற்போது பாஜகவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியமைத்துள்ளது. இதனால் இந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இதனால் இந்த முக்கியமான 5 பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். குறிப்பாக 50 முதல் 75 சீட்டுகள் வரை குறையும் என்று கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் உள்ள 150 தோல்வியுற்ற தொகுதிகளை குறி வைத்து அங்கு வெற்றி பெறுவதற்கான கணக்குகளை பாஜக வகுத்து வருகிறது. இதற்காகத்தான் பாஜக சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்துள்ளது. பீகாTஅவரது மறைவுக்குப் பிறகு பாஜக உடைத்தது. அவரது தம்பியை தனியாக பிரித்து தனிக்கட்சி தொடங்க வைத்தது. அவருக்கு மத்திய அமைச்சரவையிலும் இடம் வழங்கியது. தற்போது பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானையும் கூட்டணியில் சேர்த்துள்ளது. தமிழகத்தில் செல்வாக்கு இல்லாமல் உள்ள அதிமுகவை கூட்டணியில் சேர்த்ததோடு, அக்கட்சி சொல்படி எல்லாம் நடக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பாஜகவுக்கு பெரிய நெருக்கடி ஏற்படும்.

பாஜக கட்சிக்குள்ளேயே மோடி, அமித்ஷாவுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் புதிய ஆட்களை தயார் படுத்தும் நிலை உருவாகிவிடும் என்று மோடியும், அமித்ஷாவும் பயப்படுகின்றனர். இதனால்தான், பாஜக பல விவகாரங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வதோடு எதிர்க்கட்சிகளையும் பழிவாங்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக அமலாக்கப்பிரிவு, சிபிஐ, வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கிவிட்டனர். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post பெரிய கட்சிகள் பிரிந்ததால் 50 சீட் குறைகிறது 38 கட்சிகளுடன் பாஜக கூட்டணி? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : seat ,baja alliance ,Chennai ,Bajha ,Bajaka Alliance ,Dinakaran ,
× RELATED உத்தரபிரதேசத்தில் 3ம் கட்ட தேர்தல்...