
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- டி. ஆர் பாலு
- தில்லி
- பாராளுமன்ற
- தீழாகம்
- மீ.
- GP
- TD
- ஆர் பாலு
- தமிழக ஆளுநர்
- டி ஆர் பாலு
டெல்லி: நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனையை எழுப்ப முடிவு செய்துள்ளோம் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் 9 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளோம். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரை சிதைத்துவிட்டது ஒன்றிய அரசு. இணைச் செயலாளர் உள்ள ஒருவரை துணை நிலை ஆளுநராக நியமித்து ஒரு மாநிலத்தையே ஒன்றிய அரசு ஆட்சி செய்கிறது. பொதுசிவில் சட்டத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர மாட்டோம் என ஆளும்கட்சி கூறுவதை நாங்கள் நம்பமாட்டோம். தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த முடிவு செய்துள்ளோம் எனவும் கூறினார்.
The post தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: டி.ஆர்.பாலு பேட்டி appeared first on Dinakaran.