×

இந்திய பங்குச் சந்தைகளில் புதிய உச்சத்தில் வர்த்தகம்: சென்செக்ஸ் 302 புள்ளிகள் உயர்ந்து 67,097-ஆக அதிகரித்து சாதனை

மும்பை: இந்திய பங்குச் சந்தை புதிய வரலாற்று சாதனை உச்சத்தை எட்டி நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் புதிய வெளிநாட்டு நிதி வரவு மற்றும் வங்கி கவுண்டர்களில் வாங்குதல் ஆகியவற்றிக்கிடையே நடந்த ஆரம்ப வர்த்தகம் புதிய சாதனை உச்சத்தை எட்டியது. மேலும், அமெரிக்கா, ஐரோப்பா சந்தைகளில் நிலவிய போக்கும், இந்திய பங்குச் சந்தையை உயர பங்களிப்பு வழங்கியுள்ளது.

வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 302 புள்ளிகள் உயர்ந்து 67,097 வரை அதிகரித்து புதிய வரலாற்று சாதனை அளவை பதிவு செய்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 19,829 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. சென்செக்ஸில் இருந்து இன்டஸ்இண்ட் வங்கி, இன்போசிஸ், மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹச்டிஎப்சி வங்கி ஆகியவை 3% வரை உயர்ந்து லாபம் ஈட்டின. மாருதி, மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பாரதி ஏர்டெல் ஆகியவை பின்தங்கி நஷ்டத்தை சந்தித்தன.

The post இந்திய பங்குச் சந்தைகளில் புதிய உச்சத்தில் வர்த்தகம்: சென்செக்ஸ் 302 புள்ளிகள் உயர்ந்து 67,097-ஆக அதிகரித்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,India ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!