×

குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரத்தை காவல்துறை தலைவர்களுக்கு வழங்க முடியாது: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தகவல்

மதுரை: குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரத்தை காவல்துறை தலைவர்களுக்கு வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தக்கல் செய்துள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் குண்டர் தடுப்பு சட்டத்தை பிறபிப்பது தான் சரியாக இருக்கும், காவல்துறை தவறாக குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்அழகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குண்டர் தடுப்பு சட்டம் உத்தரவில் மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக மண்டல காவல்துறை அதிகாரி(ஐஜி) குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை பிறபிக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டுவருவதற்கான சாத்திய கூறுகளை ஆராயுமாறு 19-06-2023 அன்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், மற்றும் எம்.நிர்மல் குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசின் நிலைபாட்டை தெளிவு படுத்தினார். தற்போது இருக்கும் நிலையை தொடர்வது சரியாக மையும் என்றும், மாவட்டஆட்சி தலைவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தை பிறபிப்பதே சரியாக இருக்க முடியும் என்றும் காவல்துறை ஐஜி-களுக்கு இந்த அதிகாரத்தை வழங்க கூடாது என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. காவல்துறையை பொறுத்தவரையில் 4 காவல்துறை ஐஜி-க்கள் உள்ளனர். ஒரு மண்டல காவல்துறை தலைவரின் கீழ் சுமார் 10 மாவட்டகள் வருகிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பிற பணிகளை கவனிப்பதில் காவல்துறை தலைவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர் என அவர்களது வேலை பளுவையும், தமிழக அரசின் நிலைபாட்டையும் தெரிவித்தார்.

குண்டர் தடுப்பு சட்டம் பிறயோகிப்பதை தடுக்கும் பொறுட்டு சட்டதிருத்தம் ஏதும் செய்ய தேவையில்லை என கூறினார். இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள் தமிழ்நாட்டு அரசின் கொள்கை முடிவின் நிலைபாட்டை பதிவு செய்துகொண்டு இந்த வழக்கை முடித்துவைத்தனர்.

The post குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரத்தை காவல்துறை தலைவர்களுக்கு வழங்க முடியாது: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,iCort Branch ,Madurai ,Tamil Nadu Government High Court ,iCort ,Branch ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...