×

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளியாக திகழும் தி.மு.க இருவண்ணக்கொடியை ஏற்றி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி: முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளியாக திகழும் தி.மு.கழகத்தின் இருவண்ணக்கொடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சியில் ஏற்றி வைத்தார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று வருகை தந்த போது, தியாக துருகத்தில் திரும்பும் திசையெங்கும் திரண்டு நின்று சிறப்பான வரவேற்பை வழங்கிய கழக உடன்பிறப்புகளுக்கு என் நன்றி.

உங்கள் அன்பால் இன்னும் சிறப்பாகக் கழகப் பணியாற்றிட உத்வேகம் பெறுகிறேன். கழக வெற்றிகளுக்காக இணைந்து உழைத்திடுவோம். கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக்கழகங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 14 ஆயிரம் பாக முகவர்கள் – BLA2 & பூத் அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி, 2024 மக்களவைத் தேர்தலிலும் கழகத்தை வெல்லச் செய்வோம் என்று உரையாற்றினோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மாடாம்பூண்டி கூட் ரோடு அருகே அமைக்கப்பட்டிருந்த புதிய கொடிக்கம்பத்தில் நம்முடைய கருப்பு – சிவப்பு கொடியை ஏற்றி மகிழ்ந்தோம்.

வழிநெடுகிலும் அன்போடும் – உற்சாகத்தோடும் வரவேற்ற மாடாம்பூண்டி பொதுமக்களுக்கு என் அன்பும், நன்றியும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளியாக திகழும் தி.மு.கழகத்தின் இருவண்ணக்கொடியை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம், மணலூர்ப்பேட்டையில் அமைக்கப்பட்ட நூறு அடி உயரக் கொடி கம்பத்தில் இன்று ஏற்றி வைத்தோம். எழுச்சியும் – ஆரவாரமும் கலந்த வரவேற்பைத் தந்த நம் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு என் அன்பும், நன்றியும் இவ்வாறு குறிப்பிட்டார்.

The post முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளியாக திகழும் தி.மு.க இருவண்ணக்கொடியை ஏற்றி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Muttamizharinagar ,Minister ,Udayanidhi Stalin ,DMK ,Tamil Nadu ,Kallakurichi ,Muthamizharinagar ,Udhayanidhi Stalin ,Tamilnadu ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...