- தமிழர்கள்
- மோடி
- ஸ்ரீ
- இலங்கை
- ஜனாதிபதி
- ரணில் விக்கிரம
- இந்தியா
- தில்லி
- இலங்கை
- ரணில் விக்கிரம சிகே
- இந்தியன்
- பிரதமர் மோடி
- தின மலர்
டெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிகே இந்தியா வரவுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும்படி இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடந்த ஆண்டு அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்தது. மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அந்த நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரும் நாட்டை விட்டு தப்பி ஓடினர். அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் மாளிகைகளை மக்கள் கைபற்றி கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்த நாட்டின் அதிபராக ரணில் விக்கிரம சிகே பொறுப்பேற்றார்.
பொருளாதார சீர் திருத்தங்களை மேற்கொண்டு நெருக்கடிகளில் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளார். இலங்ககையின் பொருளாதார நெருக்கடியை தேர்க்க இந்தியா பல்வேறு வகைகளில் உதவி வருவதாக ஏற்கனவே ரணில் விக்கிரம சிகே தெரிவித்திருந்த நிலையில், அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நாளை இந்தியா வருகிறார். 2 நாள் அரசு முறை பயனமாக இந்தியா வரும் ரணில் விக்கிரம சிகே குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து இரு நாட்டு நல்லுறவு, பாதுகாப்பு, வர்த்தம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசஉள்ளார்.
இந்த சூழலில் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், எம்.பி.க்கள், முன்னால் எம்.பி.க்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில்; கடந்த 1987-ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் கந்தி இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தன் ஆகியோர் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி இலைங்கையில் இருக்க கூடிய தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடபட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தம் நிறைவேற்றபட்டு, 35 ஆண்டுகளை நெறுங்க்கிய நிலையில், தற்போதுவரை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றபடவில்லை.
எனவே இந்தியாவுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கேவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்தி தமிழர்களுக்கான அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வலியுறுத்தவேண்டும். அதேபோல மாகாணசபைகளுக்கான உள்ளாட்சி தேதர்தலை உடனடியாக நடத்தி தமிழர்களுகான மாகாண சபைகளில் பிரதிநிதியாக வருவதற்கும் வலியுறுத்தவேண்டும் என கடித்த்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிகே இந்தியா வரவுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர்கள் கடிதம் appeared first on Dinakaran.