×

மின்சார வாகனங்களுக்கு மூன்றே நிமிடங்களில் முழு சார்ஜ்: புதிய சார்ஜரை வடிவமைத்துள்ள தூத்துக்குடி இயற்பியல் மாணவர்

தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக் என்பவர் மின்சார வாகனங்களுக்கு மூன்றே நிமிடங்களில் சார்ஜ் செய்ய கூடிய புதிய சார்ஜர் ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 3-ம் ஆண்டு இயற்பியல் படித்து வருபவர் கார்த்திக். சிறு வயது முதலே எலக்ட்ரிக் துறை மற்றும் எலக்ட்ரானிக் துறையில் ஆர்வம் கொண்ட கார்த்திக் மின்சார வாகனங்களுக்கு மூன்றே நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வகையிலான சார்ஜரை கண்டுபிடித்துள்ளார்.

இதற்கு 1 யூனிட் முதல் 3 யூனிட் வரையிலான மின்சாரம் மட்டுமே செலவாகும் என்று கூறும் கார்த்திக். ரூ.15-ல் 60 கிலோ மீட்டர் வரை வாகனங்களை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கார்த்திக் தனது கண்டுபிடிப்பை ஒன்றிய அரசின் எலக்ட்ரானிக் சோதனை டெவெலப்மென்ட் மையத்திலும், திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலும் சோதனை அடிப்படையில் செய்து காண்பித்து அதற்குரிய சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

The post மின்சார வாகனங்களுக்கு மூன்றே நிமிடங்களில் முழு சார்ஜ்: புதிய சார்ஜரை வடிவமைத்துள்ள தூத்துக்குடி இயற்பியல் மாணவர் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Karthic ,Dinakaran ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது