×

பாஜக மற்றும் காங். கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம்: மாயாவதி

டெல்லி: பாஜக மற்றும் காங். கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். சாதிய மனப்பான்மையுடன் முதலாளித்துவ எண்ணங்களைக் கொண்ட கட்சிகளை காங்கிரஸ் கட்சி கட்டாயப்படுத்தி கூட்டணியில் சேர்க்கிறது. அதே நேரத்தில் தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி வைத்துள்ளது. எனவே இந்த 2 கட்சிகளிடமிருந்தும் பகுஜன் சமாஜ் விலகியே இருக்கும். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும். பிற மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் எனவும் அறிவித்துள்ளார்.

The post பாஜக மற்றும் காங். கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம்: மாயாவதி appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Kong ,Mayawati ,Delhi ,Bhajan Samaj Party ,Satya ,
× RELATED EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் பாஜக என...