×

மதுராந்தகம் அருகே பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கருங்குழி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள மாணவர்கள் தின்தோறும் காலையில் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அதேபோல இன்று காலை 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளனர்.

அப்போது மேலவலம்பேட்டை வரும் போது பின்னால் வந்த கார் அதிவேகமாக வந்து ஆட்டோ மீது பின்புறமாக மோதியது. இதனால் நிலை தடுமாறி ஆட்டோ சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் பயணம் செய்த 11 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர், ஓட்டுநர் உட்பட காயமடைந்தனர். அவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 மாணவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மதுராந்தக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுராந்தகம் அருகே பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Madurathangam ,Chengalpattu ,Madurandakam ,Chengalpattu district ,
× RELATED இனப்பெருக்க காலம் முடிந்தது சொந்த...