×

இடஒதுக்கீட்டு நடைமுறையை முற்றாக நீக்கவே பொது சிவில் சட்டத்தை கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் முயற்சி: கருத்தரங்கில் அருள்மொழி, வில்சன் பேச்சு

சென்னை: இடஒதுக்கீடு என்ற நடைமுறையை முற்றாக நீக்கிப்போடுவதற்காகவே பொது சிவில் சட்டத்தை கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் புரட்டுகளும், புரிதல்களும் என்ற பெயரில் சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி தியாகராயர் நகரில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, காங்கிரஸ் நிர்வாகியும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் நெல்சன் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி பாஜகவின் வழியாக ஆர்.எஸ்.எஸ்-யின் கொள்கைகளை செயல்படுத்தும் முயற்சிதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

அதில் ஒன்று தான் பொது சிவில் சட்டம் என்றும் இதை அனைவரும் விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். கூட்டத்தில் பேசிய வில்சன் எம்.பி இதுவரை 46 லட்சம் பேர் பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார். இதனை பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்றாலே அதில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதே உண்மை என்று அவர் குறிப்பிட்டார்.

பொது சிவில் சட்டம் தொடர்பாக கருது தெரிவிக்கும் கால நிர்ணயம் 28ம் தேதி வரை நீடிக்கப்பட்டிருப்பதால் அனைவரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இச்சட்டத்தின் மூலம் இடஒதுக்கீட்டு நடைமுறையை இல்லாமல் ஆக்குவதே ஆர்.எஸ்.எஸ்-யின் நோக்கம் என்றும் வில்சன் குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம் அக்பரேலே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் துணை பொது செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி மனிதநேய மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் சமது ஆகியோர் பங்கேற்றனர்.

The post இடஒதுக்கீட்டு நடைமுறையை முற்றாக நீக்கவே பொது சிவில் சட்டத்தை கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் முயற்சி: கருத்தரங்கில் அருள்மொழி, வில்சன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : R.R. ,Wilson ,Chennai ,S.S. ,
× RELATED உண்ணாவிரதத்தை கைவிட்ட கைதி