×

பாஜக, வாஷிங் மெஷின்தான்… எங்களிடம் வந்தால் தூய்மையாக மாற்றி விடுவோம்: வானதி சீனிவாசன் ஆவேசம்

கோவை: பாஜக, வாஷிங் மெஷின்தான் என ஒப்பு கொண்டு இருக்கும் அக்கட்சியின் தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் எங்களிடம் வந்தால் தூய்மையாக மாற்றி விடுவோம் என்று தெரிவித்துள்ளார். பாஜக-வில் சேரும் அனைவரும் மோடி வாஷிங் மெஷின் மூலம் சுத்தப்படுத்தப் படுகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறை தலைவர் ராஜு கவுடா தெரிவித்திருந்தார். இந்நிலையில், எதிர்கட்சிகளுக்கும் பாஜக-வை வாஷிங் மெஷின் என்று விமரிசித்து வருகின்றன.

இந்நிலையில், கோவையில் பேட்டியளித்த வானதி சீனிவாசன் வாஷிங் மெஷின் குறித்து எழுப்பிய கேள்விக்கு பாஜகவை வாஷிங் மெஷின் என்று விமரிசித்தால் ஆமாம் வாஷிங் மெஷின் தான் எங்களிடம் வந்தால் தூய்மையாக மாற்றி விடுவோம் என்று காட்டமாக பதில் அளித்தார். எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடத்தப்படுவதாக எழுப்பிய கேள்விக்கு என்.டி.ஏ. கூட்டம் நடத்துவது வழக்கமானது தான் புதிது கிடையாது என்று வானதி தெரிவித்தார். பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறதா என்பது கூட்டம் நடக்கும் போது தெரிந்து விடும் என்று அவர் தெரிவித்தார்.

The post பாஜக, வாஷிங் மெஷின்தான்… எங்களிடம் வந்தால் தூய்மையாக மாற்றி விடுவோம்: வானதி சீனிவாசன் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Sainivasan ,Govai ,Vaadi Sainivasan ,Heaven ,Chiniwasan ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...