×

சாலையில் இடையூறு ஏற்படுத்தும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

 

தொண்டி, ஜூலை 19: கிழக்கு கடற்கரை சாலை தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினம் செல்லும் வழியிலும் புதுப்பட்டினம் பகுதியிலும் சாலையின் இருபுறமும் காட்டு கருவை வளர்ந்துள்ளது. இதை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினம் செல்லும் வழியில் பாசிபட்டினம், வட்டானம் உள்ளிட்ட பகுதியில் சாலையின் இருபுறமும் காட்டுக் கருவை மரங்கள் வளர்ந்து வெள்ளை கோட்டை தாண்டி வந்துள்ளது. இது வாகன ஒட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்ப்படுத்துகிறது.

வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும் போது கண்களை கருவேல மரம் பதம் பார்த்து விடுகிறது. கடந்த காலங்களில் சாலை பணியாளர்கள் அவ்வப்போது சரி செய்வதை பார்க்க முடிந்தது. இதேபோல் நம்புதாளை அருகே புதுப்பட்டினம் பகுதியிலும் சாலையின் இருபுறமும் காட்டு கருவை வளர்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் பரக்கத் அலி கூறியது, கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம், நம்புதாளை, பாசிபட்டினம், வட்டாணம் உள்ளிட்ட பகுதியில் ரோட்டின் இருபுறம் கருவை வளர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் உடனடியாக கருவை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post சாலையில் இடையூறு ஏற்படுத்தும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thondi ,East Coast Road ,SB Pattinam ,Pudupatnam ,Dinakaran ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...