×

இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை

பரமக்குடி, ஜூலை 19: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் வெண்கலச் சிலை அமைத்திட வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க விழா நடந்தது. மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவர் முருகவேல் ராஜன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் நாகராஜ் பாண்டியன், முகவை மாவட்ட செயலாளர் வையமுத்து, மாநில செயல் தலைவர் அபி சுரேஷ், மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில அமைப்பு செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் பாண்டிய மள்ளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மக்கள் விடுதலைக் கட்சி நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன் பேசியதாவது: இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டு விழா வருவதை முன்னிட்டு, அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க படவேண்டும். அவரது முழு உருவ வெண்கலச் சிலை தமிழகத்தில் நிறுவப்பட வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

இமானுவேல் சேகரன் நினைவு இடத்தில் இருந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்குகிறோம். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் 10 லட்சம் கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளோம். பட்டியல் வெளியேற்றத்தை நாங்கள் ஏற்கவும் இல்லை,எதிர்க்கவும் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் சமமாக நடத்தி வருகிறார்.அதனால் இம்மானுவேல் சேகரன் நூற்றாண்டு வருவதற்கு முன்பே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார் என நம்புகிறோம் என கூறினார்.

The post இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Emanuel Sekaran Memorial Day ,Paramakkudy ,Emanuel Sekaran ,Paramakkudi ,Dinakaran ,
× RELATED பரமக்குடி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்