×

திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் மேம்பாலத்தில் தடுப்புச்சுவரை விரைந்து கட்ட கோரிக்கை

திருவாடானை, ஜூலை 19: திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சின்னக்கீரமங்கலம் பகுதியில் செல்லும் புறவழிச்சாலையில், கடந்த 3 ஆண்டுகளாக புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த புதிய மேம்பாலம் கட்டும் பணி நிறைவடைவதற்குள், வாகன போக்குவரத்து துவங்கப்பட்டு இவ்வழியாக கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

ஆனால், இந்த புதிய மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையின் பக்கவாட்டு தடுப்புச்சுவரில் சிமெண்ட் கலவை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால், அவ்வழியாக மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

தற்போது, தென்மேற்கு பருவமழை துவங்கி விட்டதால், திடீரென இப்பகுதியில் கனமழை பெய்தால் இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவரில் சிமென்ட் கலவை அமைக்காததால் மண் அரிப்பு ஏற்பட்டு மேம்பாலம் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் சிமென்ட் கலவை அமைக்கும் பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் மேம்பாலத்தில் தடுப்புச்சுவரை விரைந்து கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Trichy-Rameswaram road ,Thiruvadanai ,Chinnakeeramangalam ,Tiruchi-Rameswaram National Highway ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி