×

விழிப்புணர்வு ஊர்வலம்

 

சிங்கம்புணரி, ஜூலை 19: சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட துணை இயக்குனர் விஜய் சந்திரன் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் தானாபாய், முன்னிலை வகித்தார்.

இதில் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பள்ளியை அடைந்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சத்திய நேசன், சுகாதார ஆய்வாளர்கள் சாத்தன், எழில்மாறன்,பள்ளி ஆசிரியர்கள் சரண்யா, சொர்ணவள்ளி, அனிதா, செவிலியர் மங்கையர்க்கரசி, மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

The post விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : march ,Singampunari ,World Population Day ,Krungakottai ,Singampunari.… ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம்