×

விருதுநகரில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்

 

விருதுநகர், ஜூலை 19: விருதுநகர் நகராட்சி பகுதிகளில் இன்றும், நாளையும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விருதுநகர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகளில் சாலையோரங்களில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

இன்று தேசபந்து மைதானம், மெயின் பஜார், தெப்பம் பகுதி, கருமாதி மடம் முதல் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. நாளை, பழைய பேருந்து நிலையம் பகுதி, கச்சேரி சாலை மற்றும் மதுரை சாலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் எனவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post விருதுநகரில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Viruthunagar ,Virudunagar ,Highway Department ,Virutunagar ,Vruduagar ,Dinakaran ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...