×

வெள்ளி யானை வாகனத்தில் கமலாம்பாள் வீதியுலா 21ம் தேதி குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்து குறைதீர்க்க வாய்ப்பு

 

திருவாரூர், ஜூலை 19: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுதினம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது. ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலும், இதேபோல் கோட்ட அளவில் ஆர்.டி.ஓக்கள் தலைமையில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியிலும் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டமானது, நாளை மறுதினம் (21ம் தேதி) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். மேற்படி, கூட்டத்தில் திருவாரூர் கோட்ட அளவிலான முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு, கலெக்டர் அழைப்பு ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

The post வெள்ளி யானை வாகனத்தில் கமலாம்பாள் வீதியுலா 21ம் தேதி குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்து குறைதீர்க்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kamalampal ,Vethiula ,21st ,Kamalampal road ,Tiruvarur ,Thiruvarur ,District ,Grievance Redressal Day ,Kamalampal Road 21st Kamalampal Vethiula ,
× RELATED பழநி அருகே பத்ரகாளியம்மன் கோயில்...