×

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

 

நாமகிரிப்பேட்டை, ஜூலை 19: நாமகிரிப்பேட்டை அடுத்த ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி உதயக்குமார் கலந்துகொண்டு, பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கண்மணி, துணை தலைமை ஆசிரியர் முத்துநெல்லிஅப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருணாகரன், துணை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Celebration ,Education Development Day ,Namakrippet ,Kamaraj ,Jaderpalayam Government Higher ,Secondary ,School ,
× RELATED உத்திரமேரூர் அருகே கலைஞர் பிறந்தநாள்...