×

தென்காசியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தென்காசி, ஜூலை 19: தென்காசியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டத்தில் 53 அரசு பள்ளிகள், 40 அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த 2022-2023ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயின்ற 5 ஆயிரத்து 234 மாணவர்களுக்கும், 7 ஆயிரத்து 819 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 13 ஆயிரத்து 53 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 9 ஆயிரத்து 729 மாணவ, மாணவிகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 3 ஆயிரத்து 8 மாணவ மாணவிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 316 மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது.

அதன்படி தென்காசியில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்குஆயிரத்து 13 இலவச சைக்கிள்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமசந்திரன் வழங்கினார். கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தனுஷ் குமார்எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா வரவேற்றார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணை தலைவர் கே.என்.எல்.சுப்பையா, கவுன்சிலர்கள் வசந்தி வெங்கடேஸ்வரன், செய்யது சுலைமான்ரபீக், நாகூர்மீரான், திமுக பெருளாளர் ஷேக்பரீத், இசக்கிரவி, சன் ராஜா, சபரிசங்கர், சங்கர் ராஜன், காங்கிரஸ் வட்டார தலைவர் குற்றாலம் பெருமாள், நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஹலால் சலீம், காஜாமைதீன், சபரிமுருகேசன், கண்ணன், கோவிந்தன், சித்திக், தேவேந்திரன், பிரபாகரன், தேவராஜன், பீர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

The post தென்காசியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : South ASI ,TENKASI ,Government of Tamil Nadu ,South Kasi ,South Korea ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...