×

அரியனூர் ஊராட்சியில் திரவுபதி அம்மன் கோயிலில் அர்ஜூனன் தபசு விமரிசை

 

செய்யூர்: அரியனூர் ஊராட்சியில், திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில், அர்ஜூனன் தபசு வெகு விமரிசையாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அரியனூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் உடனுறை தர்மராஜா கோயில் தீமிதி திருவிழா இம்மாதம் 3ம் தேதி கொடியோற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலையில் மகாபாரதம் சொற்பொழிவும், இரவில் வில் வளைப்பு, சுபத்திரை திருமணம், திரவுபதி துகில், கிருஷ்ணன் தூது போன்ற கட்டை கூத்து நடாகம் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அர்ஜூனன் தபசு நிகழ்ச்சியில், பதினெட்டு படிகள் உடைய தபசு மரத்தில் மீது ஏறி, அர்ஜூனன் தவம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணமாகவும், திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என வேண்டியும் தபசு மரத்திலிருந்து அர்ஜூனன் வீசிய எலும்மிச்சம் பழங்களை சேலையின் முந்தானையால் பெண்கள் பிடித்தனர். வரும் 23ம் தேதி மதியம் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது. மறுநாள் தர்மர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா முடிவடைகிறது.

The post அரியனூர் ஊராட்சியில் திரவுபதி அம்மன் கோயிலில் அர்ஜூனன் தபசு விமரிசை appeared first on Dinakaran.

Tags : Arjunan ,Tapas ,Draupathi Amman Temple ,Arianur Panchayat ,Arjuna Tapas ,Thimiti Festival of Tirupati Amman Temple ,Arjunan Tapas ,
× RELATED வெடிவிபத்து கல்குவாரியை நிரந்தரமாக மூட கோரிக்கை