×

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக 2023 – 2024ம் நிதியாண்டில் உயர்நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் இன்டர்நெட் ரேடியோ, யூஎஸ்பி பென் டிரைவ் மற்றும் எஸ்.டி. கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உட்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட்வொர்க் தவிர மொபைல் போனின் ஹாட் ஸ்பாட் போன்ற வசதிகள் கொண்ட நவீன வாசிக்கும் கருவி வழங்கப்படவுள்ளது.

எனவே இத்திட்டத்தின் கீழ் தகுதியான பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன் பெற ஏதுவாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல், ஆதார் அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் புகைப்படம் – 3 யூடிஐடி ஸ்மார்ட் கார்டு நகல், மருத்துவச் சான்றின் நகல் (படிவம் 7), கல்வி பயிலும் சான்று அசல் போன்ற ஆவணங்களுடன் நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்க வேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District Handicapped Welfare Office ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...