×

பாஜவில் சேர்ந்தால் புனிதர் ஆகிவிடுவார்களா?: ஒன்றிய அரசுக்கு பீட்டர் அல்போன்ஸ் கேள்வி

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையின ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது: அமலாக்கத்துறை என்பது ஆள் தூக்கி துறையாக மாறி பல நாட்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு ஆள் பிடிக்கின்ற துறையாக மாறி இருக்கிறது. இன்றைக்கு அசாமில் பாஜவைச் சேர்ந்தவர் தான் முதல்வராக இருக்கிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோடியும், அமித்ஷாவும் அசாமுக்கு சென்ற போது, ‘ஹிமந்த் பிஸ்வா சர்மா ஒரு ஊழல்வாதி என்றனர். இதை யடுத்து ஹிமந்த் பிஸ்வா பாஜவில் சேர்ந்து விட்டார். அதன்பிறகு அவர் மீதான வழக்குகள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டன.

ஆனால், இவ்வளவும் முடிந்த பிறகும் அஜித் பவார் பாஜ கூட்டணியில் சேர்வதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிற வேளையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. அந்த குற்றப்பத்திரிகையில் அஜித் பவார் பெயரே சேர்க்கப்படவில்லை. பாஜவில் சேர்ந்துவிட்டதால் இவர்கள் எல்லாம் புனிதர்கள் ஆகிவிட்டார்களா? அந்த வழக்கே முடித்து வைக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். அதற்கு போய் இப்போது சோதனை நடத்தப்படுகிறது.

The post பாஜவில் சேர்ந்தால் புனிதர் ஆகிவிடுவார்களா?: ஒன்றிய அரசுக்கு பீட்டர் அல்போன்ஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : BJP ,Peter Alphonse ,Union Government ,Chennai ,Tamil Nadu Minorities Commission ,Enforcement Department ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...