×

பாஜ கூட்டணியில் 37வது பெரிய கட்சி அமலாக்கத்துறை: டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் தாக்கு

சென்னை: பாஜ கூட்டணியில் 37வது பெரிய கட்சியாக அமலாக்கத்துறையையும் சேர்த்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பாஜவினர் நினைக்கின்றனர் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். திமுக தலைமை செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ்.இளங்கோவன் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று அளித்த பேட்டி: 36 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்களே, அதில் 37வது பெரிய கட்சியாக அமலாக்கத்துறையையும் சேர்த்து, தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பாஜவினர் நினைக்கின்றனர். பாஜ எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டணியை பார்த்து அச்சப்படுகிறது என்பது இது போன்ற நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்துகிறது. அமைச்சர் பொன்முடி நன்றாக இருக்கிறார். அவர் அச்சத்தில் இல்லை, மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்த விஷயத்தில் அவரை பொறுத்தவரை குற்றம் இல்லை.

அதனால், அவருக்கு பயம் இல்லை. உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜ தான். இன்றைக்கு ஒன்றிய அரசின் நிதித்துறையை சொல்லியிருக்கிறது. கர்நாடகாவில் கடந்த முறை 13 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கினார்களே, அற்கான பணம் எங்கே இருந்து வந்தது. திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள். அமலாக்கத்துறை 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய விசாரணையை அதிகாலை 3 மணி வரை நீட்டித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆலோசனை முடிவுகள் மக்களுக்கு சென்றடைவதை தடுக்கவே திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

The post பாஜ கூட்டணியில் 37வது பெரிய கட்சி அமலாக்கத்துறை: டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : BJP alliance ,TKS Elangovan ,CHENNAI ,BJP ,largest ,DKS Elangovan ,Dinakaran ,
× RELATED வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால்...