×

வணிகர்நல வாரிய உறுப்பினர்கள் அறிவிப்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அமைச்சர் மூர்த்திக்கு நன்றி

சென்னை: வணிகர் நல வாரியத்திற்கு உறுப்பினர்களை தேர்வுசெய்து அரசாணை வெளியிட்டதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அமைச்சர் மூர்த்தியை நேரில் சந்தித்து நன்றி கூறினார். இதுகுறித்து விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் வணிகர் நல வாரியம் அமைத்து, நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வுசெய்து அரசாணை வெளியிட்டமைக்கு, இவ்வாரியத்தின் துணைத் தலைவரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தியை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம், அப்போது மாநில கூடுதல் செயலாளர் மணி, கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்டராஜா, மாநில இணைச்செயலாளர் பாலசண்முகம், தென்சென்னை வட க்கு மாவட்ட தலைவர் எட்வர்ட், தென்சென்னை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கர் உடனிருந்தனர்.

The post வணிகர்நல வாரிய உறுப்பினர்கள் அறிவிப்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அமைச்சர் மூர்த்திக்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : Chamber of Commerce and Industry Federation of Merchants Associations ,Minister ,Murthy ,Chennai ,President ,Tamil Nadu Federation of Merchants Associations ,Wickramaraja ,Merchants Welfare Board ,
× RELATED துயர் தீர்ப்பார் திருத்தளிநாதர்