×

விலையை குறைக்க என்ன ஒரு ஐடியா! 4 நாளு தக்காளி வாங்காதீங்க… மக்களுக்கு எச்.ராஜா அட்வைஸ்

திருச்சி: ‘நான்கு அல்லது ஐந்து நாள் தக்காளி வாங்காமல் இருந்தால் விலையை குறைக்கலாம்’ என்று எச்.ராஜா யோசனை தெரிவித்தார். நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பாஜ ஆட்சி நடக்கும் பல்வேறு மாநிலங்களில் கிலோ ரூ.160க்கும் மேல் விலை உயர்ந்துள்ளது. எதிர்க்கட்சி மாநிலங்களில் கிலோ ரூ.120 முதல் 140 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் விலையை குறைக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பேட்டியளிக்கும் பாஜ தலைவர்கள், ‘தக்காளி விலை அவ்வப்போது உயர்வது வழக்கம்தான்’ என்று கூலாக பதிலளித்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளி மார்க்கெட்டிலும் கிலோ ரூ.120 வரைதான் விற்கிறது. இது மற்ற மாநிலங்களை விட குறைவுதான்.

இந்த நிலையில், திருச்சி மாவட்ட பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று அளித்த பேட்டி: தக்காளி விவசாயிகள் படும்பாடு அதிகம். எனவே 40 ரூபாய்க்கு கீழே தக்காளி விலை குறைந்தால் அரசே அதனை வாங்கும் என்று முடிவு எடுக்க வேண்டும். நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளியின் விலையை குறைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. ஏற்றமும் இறக்கமும் வாடிக்கையான ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார். தக்காளி விலையை குறைக்க ஒன்றிய பாஜ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தக்காளி வாங்காதீங்க, விலை குறையும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியிருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

The post விலையை குறைக்க என்ன ஒரு ஐடியா! 4 நாளு தக்காளி வாங்காதீங்க… மக்களுக்கு எச்.ராஜா அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : H. Raja ,Trichy ,H.Raja ,Dinakaran ,
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...