×

வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால எலும்புகள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இங்கு சுடுமண் பொம்மை, சங்கு வளையல்கள், யானை தந்தத்தாலான பகடை, தோசைக்கல், கிண்ணம் உள்ளிட்ட 2,900க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தோண்டிய குழியில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இவை மனித எலும்புகளா என அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள், மனிதனுடையதா அல்லது விலங்குகளுடையதா, எந்தக் காலத்தை சேர்ந்தவை என பகுப்பாய்வு நடத்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. ஆய்வுக்கு பின்னரே முழுமையான விபரம் தெரிய வரும்’’ என்றனர்.

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால எலும்புகள் appeared first on Dinakaran.

Tags : Vembakota ,Virudhunagar ,Vijayakarisalkulam ,Vembakottai, Virudhunagar district ,Vembakotta ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...