×

தொடரை வெல்ல ஆஸி. முனைப்பு: சமன் செய்யுமா இங்கிலாந்து?

ஓல்டு டிரபோர்டு: ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காம் மற்றும் லண்டன் லார்ட்ஸ் மைதானங்களில் நடந்த முதல் 2 டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியை வசப்படுத்திய நிலையில், லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்க, 4வது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்று 3-1 என அசைக்க முடியாத முன்னிலை பெறுவதுடன் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

அதே சமயம், 2-2 என சமன் செய்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இங்கிலாந்து அணியும் வரிந்துகட்டுகிறது. சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடர் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டியும் மிக சுவாரசியமாக, விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை அறிவிப்பதில் ஆஸ்திரேலியா நிதானம் காட்டி வரும் நிலையில், ஒரு நாள் முன்பாகவே இங்கிலாந்து அணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராடு, ஹாரி புரூக், ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஆலிவர் ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

The post தொடரை வெல்ல ஆஸி. முனைப்பு: சமன் செய்யுமா இங்கிலாந்து? appeared first on Dinakaran.

Tags : Aussies ,England ,Old Trafford ,Australia ,Ashes ,Manchester.… ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை