×

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்கு 105 நாட்கள் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், மற்றும் கன்னடியன் கால்வாய் ஆகிய நான்கு கால்வாய்கள் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்பு நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்கும் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் 19.07.2023 முதல் 31.10.2023 முடிய (105 நாட்கள்) 3015 மி.க.அடிக்கு மிகாமல் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 18090 தண்ணீர் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

The post திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்கு 105 நாட்கள் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Tirunelveli district ,Chennai ,Babanasam ,Servalaram ,Manimutharai ,Tamiraparani ,North Goddamalazagiyan Canal ,
× RELATED நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில்...