×

இந்தியா முழுவதும் எங்கள் குடும்பம், அதற்காக நாங்கள் போராடுகிறோம்: உத்தவ் தாக்கரே பேட்டி

பெங்களூரு: இந்தியா முழுவதும் எங்கள் குடும்பம், அதற்காக நாங்கள் போராடுகிறோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் வகையில் 26 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே; பல்வேறு கருத்துகளை கொண்டவர்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளோம்.

வெவ்வேறு கொள்கைகள் உடையவர்கள் ஒன்றிணைவதாக கூறுகிறார்கள், அதுதான் ஜனநாயகம். ஒரு குடும்பத்திற்காக ஒன்றிணைவதாக கூறுகிறார்கள், இந்தியா தான் எங்கள் குடும்பம். இந்தியா முழுவதும் எங்கள் குடும்பம், அதற்காக நாங்கள் போராடுகிறோம். இந்த கூட்டணி வென்றால் மக்களிடையே அன்பு மலரும், வளர்ச்சி பெருகும். அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவே மோடி செயல்படுகிறார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே தேசத்தின் தர்மம் இவ்வாறு கூறினார்.

The post இந்தியா முழுவதும் எங்கள் குடும்பம், அதற்காக நாங்கள் போராடுகிறோம்: உத்தவ் தாக்கரே பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Uttav ,Bengaluru ,Uddhav Takare ,Bangalore ,
× RELATED அரை சதம் விளாசினார் ஷ்ரேயாஸ் இந்தியா 160 ரன் குவிப்பு